போலீசில் புகார் அளித்த நடிகர் பார்த்திபன்! அடுத்த படத்திற்கு இப்படி ஒரு சிக்கலா
நடிகர், இயக்குனர் என பல திறமைகள் கொண்டவர் பார்த்திபன். வித்தியாசமான படங்களை கொடுத்து வரும் அவர் தற்போது சென்னை போலீசில் புகார் அளித்து இருக்கிறார்.
அவர் டீன்ஸ் என்ற பெயரில் தற்போது படம் இயக்கி வருகிறாராம். அந்த படத்தின் விஎப்எக்ஸ் பணிகளை செய்த நிறுவனத்தின் மீது தான் புகார் கொடுத்து இருக்கிறார் பார்த்திபன்.
புகார்
VFX காட்சிகளை உருவாக்க கோவையை சேர்ந்த சிவப்ரசாத் என்பவர் பணியாற்றி வந்தாராம். அதற்காக 68.5 லட்சம் ருபாய் பேசப்பட்டு இருக்கிறது.
ஏப்ரல் மாதமே முடித்து கொடுக்கிறேன் என கூறிய அவருக்கு 42 லட்சம் ருபாய் பணம் கொடுத்து இருக்கிறார் அவர் தாமதம் செய்த காரணத்தால் முழு பணத்தையும் பார்த்திபன் தராமல் இருந்திருக்கிறார்.
இந்நிலையில் மீண்டும் 88.4 லட்சம் பணம் கேட்டு இமெயில் வந்த நிலையில் அந்த நபர் மீது பார்த்திபன் போலீசில் புகார் கொடுத்து இருக்கிறார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
