அஜித் போன் நம்பர் கொடுத்ததே நான் தான்.. 'தலை’க்கு வைர கிரீடம்: நடிகர் பார்த்திபன்
நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். முதலமைச்சர் தொடங்கி சினிமா துறை பிரபலங்கள் வரை பலரும் அவருக்கு வாழ்த்து கூறி இருக்கின்றனர்.
தற்போது நடிகர் பார்த்திபன் "தலை-க்கு வைர கிரீடம்" என குறிப்பிட்டு போட்டிருக்கும் பதிவு தற்போது வைரலாகி இருக்கிறது.
நம்பர் கொடுத்ததே நான் தான்..
நடிகர் பார்த்திபன் தனது பதிவில் கூறி இருப்பதாவது..
இன்று மதியம் ஒரு இசை பிரபலம், நண்பர் திரு அஜீத் குமாரின் எண் கேட்க,’ஏன்?” கேட்டேன், மத்திய அரசு அவரை அவசரமாக அணுக விரும்புகிறது. உடனே கொடுங்கள் என்றது அக்குரல். நல்ல விஷயம்தான் என்பதை புரிந்துக் கொண்டு நான் முயற்சித்தேன்.ஒருவழியாக அவரின் P r o திரு சுரேஷ் சந்திராவின் தொடர்பை ஏற்படுத்தினேன். மாலையில் வந்த செய்தி அஜீத் கழுத்துக்கு மாலை என்பது மீறி,’ தலை’க்கு வைர கிரீடம் ஆனது.
Congratulations PADMABHUSHAN AJITH KUMAR!!!
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.