இந்த குழந்தை வேண்டாம்! பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா எடுத்த முடிவு, வீடியோ இதோ
பாக்கியலட்சுமி
சின்னத்திரையில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ராதிகா கர்ப்பமாக இருப்பது தான் கோபியை பரபரப்பாக்கி இருக்கிறது.
இந்த விஷயத்தை எப்படி வீட்டில் சொல்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார். ஆனால், அவர் சொல்வதற்கு முன் அவருடைய முன்னாள் மனைவியான பாக்கியாவிற்கு தெரிய வந்துவிட்டது.
சரி இதை எப்படி தனது அம்மா ஈஸ்வரி இடம் கூறுவது என தெரியாமல் பயத்தில் இருந்த கோபி, தைரியத்தை வளர்த்துக்கொண்டு, ஈஸ்வரிடம் கூறிவிட்டார். இதை கேட்ட ஈஸ்வரி அதிர்ச்சியில் உறைய உடனடியாக வீட்டிற்கு வந்துவிட்டார்.
குழந்தை வேண்டாம்
இதை பற்றி ராதிகாவிடம் சென்று பேசும் ஈஸ்வரி 'இந்த குழந்தை வேண்டாம்' என கூறிவிடுகிறார். ஆனால், ராதிகா 'இந்த குழந்தை வேண்டுமா வேண்டாமா என்ற முடிவை நான் தான் எடுப்பேன்' என கூற, கோபத்தின் உச்சத்திற்கு செல்கிறார் ஈஸ்வரி.
இவர்களுக்கு இடையே வழக்கம் போல் மாட்டிக்கொண்டு முழிக்கிறார் நம்ம கோபி. சரி பாக்கியலட்சுமியில் இதன்பின் என்ன நடக்கப்போகிறது என வரும் வாரம் பொறுத்திருந்து பார்ப்போம்.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ :

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
