சூர்யா படத்தில் இணைந்த 63 வயது நடிகை.. யார் தெரியுமா
சூர்யா தற்போது கருப்பு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் அடுத்த ஆண்டு வெளிவரவுள்ளது. இப்படத்திலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த டீசர் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சூர்யா 46
கருப்பு படத்தை தொடர்ந்து சூர்யா தனது 46வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக நடிகை மமிதா பைஜூ நடித்து வருகிறார்.
நடிகை ராதிகா
இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் மூத்த நடிகை ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாருமில்லை, நடிகை ராதிகாதான். இவர் தற்போது சூர்யா 46 படத்தில் சூர்யாவின் அம்மாவாக நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.
மேலும் பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.