நடிகை ராதிகாவின் மருமகன் ஒரு கிரிக்கெட் வீரரா?.. வெளிவந்த அதிரடி தகவல்
ராதிகா
தமிழ் சினிமா கண்ட சிறந்த நடிகைகள் என்ற லிஸ்ட் எடுத்தால் அதில் டாப்பில் இருப்பவர் நடிகை ராதிகா சரத்குமார். எம்.ஆர்.ராதா அவர்களின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நடிக்க வந்தவர்.
வெளிநாட்டில் படிப்பை முடித்துவிட்டு இந்தியா வந்தவர் பாரதிராஜா கண்ணில் பட கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்க அடுத்தடுத்து ரஜினி, கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார். சீரியலில் கலக்கிய ராதிகா இப்போது படங்களில் அம்மா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார்.
ஷாக்கிங் தகவல்
இந்நிலையில், நடிகை ராதிகாவின் மருமகன் ஒரு கிரிக்கெட் வீரர் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், அவர் பெயர் அபிமன்யு மிதுன்.
அவரை தான் ராதிகாவின் மகள் ரயானே திருமணம் செய்து கொண்டுள்ளார். அபிமன்யு இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாடி இருக்கிறார். இதுதவிர ஐபிஎல் தொடரில் ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.