திருமணத்திற்கு பின் ஆளே மாறிய ராம் பட நடிகை.. இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க
ராம் பட நடிகை
இயக்குநர் அமீர் இயக்கத்தில் ஜீவா ஹீரோவாக நடித்து வெளிவந்த படம் ராம். இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன் ஜீவாவின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் நடிகை கஜாலா ஷேக் கான் கதாநாயகியாக இப்படத்தில் நடித்திருந்தார். இவர் தமிழில் வெளிவந்த ஏழுமலை, ராம், ராமன் தேடிய சீதை, ஜோர் ஆகிய சில திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
தெலுங்கில் நலோ வுன்னா பிரேமா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
கணவர், மகனுடன் நடிகை
2011ம் ஆண்டுக்கு பின் சினிமாவில் இருந்து விலகிய நடிகை கஜாலா 2016ம் ஆண்டு பைசல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு Zizou என ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில், ராம் பட நடிகை கஜாலா சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..



 
                                        
                                         
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    