'பெண்கள் எந்த சூழலிலும் அதை விடாதீர்கள்'.. ஊக்கமளிக்கும் நடிகை ராஷி கண்ணாவின் பேச்சு

By Karthick Raja Aug 19, 2026 03:15 AM GMT
Report

முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷி கண்ணா, பெண்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அமெரிக்காவில் படைத்த இமாலய சாதனை

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அமெரிக்காவில் படைத்த இமாலய சாதனை

ராஷி கண்ணா

இமைக்கா நொடிகள், அரண்மனை 3 & 4, சர்தார், அடங்கமறு போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ராஷி கண்ணா. இவர் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து தர்மன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திரையுலக பிரபலங்கள் பேசுவது இணையத்தில் அவ்வப்போது வைரலாகும். அந்த வகையில், நடிகை ராஷி கண்ணா சமீபத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளன.

கனவு

அதில், "கனவுகள் என்பது அழகான விஷயம். அந்த கனவுகளை நோக்கிய பயணம் எப்போதும் அழகானது. பொதுவாகவே வாழ்க்கையில் பல தேடல்களை கடந்துகொண்டிருக்கிறோம். நானும் அப்படிதான்; என்னுடைய ஒவ்வொரு நாளும் தேடலுடன் ஆரம்பமாகிறது. எனக்கான கனவுகள் நிறைய உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக முடித்து நகரத்து செல்கிறேன்".

பின்வாங்க செய்யாதீர்கள்

மேலும் பேசிய அவர், "இங்கு நம் பாதையில் இருக்கும் தடைகள் தோல்விகள் கிடையாது. வெற்றிக்கான உந்துசக்திகள்தான். எனவே கனவை துரத்துவதை விட்டுவிடாதீர்கள். குறிப்பாக பெண்கள் எந்த சூழலிலும், எதற்காகவும் கனவுகளை நிறுத்தாதீர்கள். உங்கள் முயற்சிகளிலிருந்து எப்போதும் பின்வாங்கவும் செய்யாதீர்கள்" என கூறினார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US