பல கோடி கொடுத்து மூன்றாவது வீடு வாங்கிய ராசி கண்ணா.. அரண்மனை போல இருக்கே
நடிகை ராசி கண்ணா தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் பாப்புலரான நடிகையாக இருந்து வருகிறார். ஹீரோயின் ரோல் மட்டுமின்றி செகண்ட் ஹீரோயின் ரோல்களிலும் அவர் சிறப்பாக நடித்து வருகிறார்.
தற்போது சுந்தர்.சியின் அரண்மனை 4 படத்திலும் ராசி கண்ணா முக்கிய ரோலில் நடித்து இருக்கிறார்.
ராசி கண்ணாவுக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர் ஹோம்லியாக நடிப்பது மட்டுமின்றி தாராள கவர்ச்சியும் காட்டி வருகிறார்.

மூன்றாவது வீடு
இன்று ராசி கண்ணா ஹைதராபாத்தில் மூன்றாவது வீட்டை வாங்கி இருக்கிறார். அவர் பல கோடி கொடுத்து வாங்கி இருக்கும் புது வீட்டின் கிரஹப்ரவேசம் இன்று நடந்து முடிந்து இருக்கிறது.
குடும்பத்துடன் அவர் புது வீட்டில் பூஜை செய்யும் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
சுமார் 58 கோடி ருபாய் சொத்து மதிப்பு வைத்திருக்கும் ராசி கண்ணா வாங்கி இருக்கும் மூன்றாம் வீடு அரண்மனை போல இருக்கிறதாம்.

