பேசில் ஜோசப், எல்.கே. அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகும் 'ராவடி' படத்தின் மிரட்டலான டீசர்..
மலையாளத்தில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ள நடிகர் பேசில் ஜோசப். இவர் சமீபத்தில் வெளிவந்த பராசக்தி படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் தமிழில் நடிக்கும் படம்தான் ராவடி.

சிறை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான எல்.கே. அக்ஷய் குமார் இப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் அன்புden என்கிற குறும்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த குறும்படம் MovieBuff நடத்திய Contest-ல் பங்கேற்று அதில் வென்றுள்ளது.

மேலும், லோகேஷ் கனகராஜிடம் துணை இயக்குநராக பணிபுரிந்து விஷ்ணு எடவன் என்பவரிடம் விக்னேஷ் வடிவேல் பணிபுரிந்திருக்கிறார். இதுமட்டுமின்றி விஜய்குமார் நடிப்பில் வெளிவந்த Fight Club திரைப்படத்தில் விக்னேஷ் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வித்தியாசமான கதைக்களத்தில் ராவடி படத்தை இயக்குநர் விக்னேஷ் வடிவேல் உருவாக்கியிருக்கிறார் என்பது இந்த மிரட்டலான டீசரை பார்க்கும்போது தெரிகிறது. இதோ அந்த டீசர், நீங்களே பாருங்க: