வசூலில் சாதனை படைத்து வரும் ராயன்.. இதுவரை இத்தனை கோடியா
ராயன்
ராயன் நடிகர் தனுஷின் 50வது திரைப்படமாகும். இதனை அவரே இயக்கி நடித்தும் இருந்தார். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது.

நடிகர் தனுஷிற்கு அவருடைய 25வது படம் வேலையில்லா பட்டதாரி எப்படி அமைந்ததோ, அதே போல் தற்போது 50வது படம் ராயன் மாபெரும் அளவில் வெற்றியை தேடி கொடுத்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் தனுஷுடன் இணைந்து முதல் முறையாக எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்திருந்தார். மேலும் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், சரவணன், பிரகாஷ் ராஜ், அபர்ணா பாலமுரளி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
வசூல்
இந்த நிலையில், இப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ராயன் உலகளவில் ரூ. 141 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் ரூ. 150 கோடியை ராயன் தொடுமா என்று.

Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri