100 கோடியை கடந்த ராயன்.. 8 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்!
ராயன்
ராயன் படத்திற்கு முதல் நாளில் இருந்தே மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. தனுஷின் 50வது படமான ராயனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.
இப்படத்தை இயக்கி, நடித்திருந்தார் தனுஷ். மேலும் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், செல்வராகவன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேலும் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்திருந்தார்.
வசூல்
உலகளவில் வசூலில் மாஸ் காட்டி வந்த ராயன் படம் 7 நாட்களில் ரூ. 102 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது. இதன்மூலம் வேகமாக 100 கோடி வசூல் செய்த தனுஷின் திரைப்படம் என்ற சாதனையையும் ராயன் படைத்துள்ளது.
இந்த நிலையில், ராயன் படம் 8 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 107 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
