உலகளவில் வசூலை வாரிக்குவிக்கும் ராயன்.. இதுவரை எவ்வளவு தெரியுமா
ராயன்
2024ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த திரைப்படங்களில் ஒன்று ராயன். இப்படத்தை நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இப்படத்தின் மூலம் தன்னை இயக்கிய தனது அண்ணனும், இயக்குனருமான செல்வராகவனை தனுஷ் இயக்கினார். மேலும் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே. சூர்யா என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர்.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பு கிடைக்க துவங்கியது. இதுவரை தனுஷ் நடிப்பில் வெளிவந்த எந்த படத்திற்கு கிடைத்த வசூல் வரவேற்பு இப்படத்திற்கு கிடைத்துள்ளது என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
வசூல்
இந்த நிலையில், ராயன் திரைப்படம் வெளிவந்து 4 நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் சாதனை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 4 நாட்களில் உலகளவில் ரூ. 82 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

நான் இப்போ 7 மாத கர்ப்பம்; ஆனால், எனக்கு 27 வயதில் பொண்ணு இருக்கா - சீரியல் நடிகை அகிலா IBC Tamilnadu

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

திருமணத்திற்கு முன்பே 6 மாத கர்ப்பம் - மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம் - பெண்ணு யார் தெரியுமா? IBC Tamilnadu

மடத்தில் தினமும் ஒரு மணி நேரம் தியானம் செய்யும் முஸ்லிம் பெண் - என்ன சொன்னார் தெரியுமா? IBC Tamilnadu
