வசூலில் மாபெரும் சாதனைகளை படைக்கும் தனுஷின் ராயன்.. இதுவரை எவ்வளவு தெரியுமா
ராயன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். இவர் பா. பாண்டி படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதன்பின் இவருடைய இயக்கத்தில் இரண்டாவதாக உருவாகி கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் ராயன். A சான்றிதழுடன் வெளியான படத்தை ரத்தம் தெறிக்க தெறிக்க எடுத்திருந்தார் தனுஷ். சிலர் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களை தெரிவித்தாலும், பலரும் இப்படத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடிவிட்டார்கள்.
வசூல்
7 நாட்களில் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தனுஷ் கேரியரில் குறுகிய நாட்களில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையையும் இப்படம் படைத்துள்ளது.
இந்த நிலையில், இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 140 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம், இப்படம் இன்னும் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்று.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
