ப்ரீ புக்கிங்கில் பட்டையை கிளப்பும் ராயன்.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா
ராயன்
முன்னணி நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ராயன். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் செல்வராகவன், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், காளிதாஸ், அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே. சூர்யா மற்றும் பிரகாஷ் ராஜ் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 26ஆம் தேதி வெளியாகிறது.

சமீபத்தில் வெளிவந்த ராயன் படத்தின் ட்ரைலர் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் ப்ரீ புக்கிங் பட்டையை கிளப்பி வருகிறது. ஆம், கடந்த சில தினங்களுக்கு முன் ராயன் படத்தின் ப்ரீ புக்கிங் துவங்கியுள்ளது.
வசூல்
இதில் இதுவரை உலகளவில் ரூ. 1.5 கோடிக்கும் மேல் ராயன் படம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ப்ரீ புக்கிங்கிலேயே இப்படத்திற்கு இதுவரை நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என கூறி வருகின்றனர். இதனால் முதல் நாள் ராயன் படம் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri