தமிழ்நாட்டில் மட்டுமே ராயன் இத்தனை கோடிகள் வசூல் செய்துள்ளதா! எவ்வளவு தெரியுமா
ராயன்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி, நடித்து வெளிவந்த ராயன் படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 96 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. 7 நாட்கள் முடிவில் ரூ. 100 கோடியை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை வெளிவந்த தனுஷின் படங்களை விட ராயன் படத்திற்கு கிடைத்துள்ள வசூல் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
தமிழக வசூல்
இந்த நிலையில், தமிழ்நாட்டில் ராயன் படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ராயன் திரைப்படம் கடந்த ஆறு நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 49.6 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri
