12 நாட்களில் ராயன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
ராயன்
2024ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இருந்து வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படங்களில் ராயன் படமும் இடம்பிடித்துள்ளது.
தனுஷ் இயக்கி, நடித்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. மேலும் இது தனுஷின் 50வது படமாகும். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா முதல் முறையாக நடித்திருந்தார். அதுவும் வில்லனாக மிரட்டியிருந்தார்.
மேலும் துஷாரா விஜயன், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் என பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான இப்படம் 7 நாட்களில் உலகளவில் ரூ. 100 கோடியை கடந்தது.
வசூல்
இந்த நிலையில், ராயன் படம் உலகளவில் கடந்த 12 நாட்களில் ரூ. 132 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 69 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை தனுஷ் நடித்த எந்த ஒரு திரைப்படமும் செய்யாத மாபெரும் வசூல் சாதனையை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ராயன் படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
