ரச்சிதா கணவரை பிரிய இதுதான் காரணம்! பிரச்சனை பற்றி அவரே சொன்ன ஷாக்கிங் உண்மை
ரச்சிதா
நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி தற்போது விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக வந்திருக்கிறார். அவர் கணவர் தினேஷிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் அது பற்றி அவர் ஷோவில் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பிக் பாஸ் ஓப்பனிங் விழாவில் தன் அப்பா, அம்மா குடும்பம் பற்றி மட்டுமே பேசி இருந்தார். கணவர் பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை. அதனால் அவர் சட்டப்படி விவாகரத்து பெறுவது உறுதி என தெரிந்தது.
இது தான் பிரச்சனை
தற்போது பிக் பாஸில் சில போட்டியாளர்களிடம் பேசிய அவர் தான் கணவருடன் சந்தித்த பிரச்சனை பற்றி பேசி இருக்கிறார்.
ரச்சிதா சம்பாதிக்கும் பணத்தை அவரது அப்பா அம்மாவுக்கு கொடுக்க கூடாது என்று தினேஷ் பிரச்சனை செய்தது பற்றி அவர் கூறி இருக்கிறார்.
"அந்த பிரச்சனையையே நான் அதிகம் பார்த்துவிட்டேன். அதனால் அவர்களுக்கு என்று ஒரு பணம் இருக்க வேண்டும் என சொல்விட்டேன். நான் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும் அதை எனக்கு கொடுக்காதீர்கள் என அப்பா, அம்மாவிடம் சொல்லிவிட்டேன்" என ரச்சிதா தெரிவித்து உள்ளார்.
பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?- ஜி.பி முத்து, ஜனனிக்கு இவ்வளவா?

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
