60 வயதான நடிகருடன் இணைந்து படம் நடித்துள்ள சீரியல் நடிகை ரச்சிதா- பிரம்மாண்டமாக வைக்கப்பட்ட கட்அவுட்
ரச்சிதா மகாலட்சுமி
சரவணன்-மீனாட்சி, பிரிவோம் சந்திப்போம், இளவரசி, நாச்சியார்புரம், இது சொல்ல மறந்த கதை, நாம் இருவர் நமக்கு இருவர் என தொடர்ந்து சின்னத்திரையில் நாயகியாக கலக்கி வந்தவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.
தொடர்களை தாண்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டிருந்தார். இதுதவிர சில படங்களிலும் நடித்துள்ள ரச்சிதா தற்போது கூட 3 தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
புதிய படம்
தமிழ் படங்களை தாண்டி ரச்சிதா கன்னடத்தில் ஒரு படம் நடித்துள்ளார். ரங்கநாயகி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஜக்கேஷ் என்பவர் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ரச்சிதா நடித்துள்ளார்.
60 வயதான இவர் தற்போது பாராளுமன்ற எம்பி ஆக இருக்கிறது. தனது முதல் படத்தில் 60 வயதான நடிகருடன் நடித்த ரச்சிதா அந்த மொழியில் இன்னொரு படம் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழில் மெய் நிகரே, ஃபயர் உட்பட 3 படங்களில் ரச்சிதா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
