தனது கணவர் தினேஷ் மீது போலீஸில் புகார் அளித்துள்ள சீரியல் நடிகை ரச்சிதா- ஏன் தெரியுமா, ரசிகர்கள் ஷாக்
ரச்சிதா-தினேஷ்
தமிழ் சினிமாவிற்கு பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. அந்த தொடரில் கருப்பு நிறத்தில் மேக்கப் போட்டு நடித்திருப்பார்.
அதன்பின் அவருக்கு சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது, அப்படியே சில தொடர்கள் நடித்தார்.
கடைசியாக விஜய்யில் நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் நடித்தார், ஜீ தமிழில் நாச்சியார்புரம் நடித்தார். அதன்பின் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இது சொல்ல மறந்த கதை தொடரில் நடித்தார்.

கணவர் மீது புகார்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரச்சிதா தனது கணவர் தினேஷை பிரிந்திருப்பதை உறுதி செய்திருந்தார். இந்த நிலையில் நடிகை ரச்சிதா தனது கணவர் தினேஷ் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், கடந்த சில தினங்களாக தினேஷ் தனது செல்போனுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்புவது மற்றும் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுவதாக நடிகை ரச்சிதா புகார் அளித்துள்ளார்.
காவல் நிலையத்தில் ஆஜரான தினேஷ், ரச்சிதா விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடலாம் என தெரிவித்துவிட்டு சென்றுள்ளாராம்.

உடல் பருமனை குறைக்க நடிகை அனுஷ்கா ஷெட்டி செய்யும் யோகா பயிற்சி, டயட் சீக்ரெட்
இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் News Lankasri
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan