பிக் பாஸ் ரச்சிதா மகாலக்ஷ்மி வாங்கிய புது கார்.. விலை இத்தனை லட்சமா?
ரச்சிதா
சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக முன்னணி சின்னத்திரை நடிகையாக வளர்ந்தவர் தான் ரச்சிதா. அவர் விஜய் டிவி மட்டுமின்றி ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் சேனல்களிலும் சீரியல்கள் நடித்து இருக்கிறார்.
மேலும் அவர் பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராகக் கலந்துகொண்டு மேலும் பிரபலம் அடைந்தார். அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், திருமண வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் பற்றியும் சில இடங்களில் ரச்சிதா கூறி இருந்தார்.
புது கார்
தற்போது ரச்சிதா ஒரு புது காரை வாங்கி இருக்கிறார். அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கின்றன.
MG Hector காரை தான் அவர் வாங்கி இருக்கிறார். அதன் விலை சுமார் 26 லட்சம் ருபாய் இருக்கும் என தெரிகிறது. தற்போது ரச்சிதாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.



