புதிய சீரியலில் நடித்துள்ள நடிகை ரச்சிதா, இப்படி ஒரு ரோலா?- இதோ அந்த புகைப்படம்
விஜய் தொலைக்காட்சியில் சரவணன்-மீனாட்சி என்ற சீரியல் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ரச்சிதா.
அதே சீரியலின் பெயரில் அவர் தொடர்ந்து நாயகியாக நடித்து வந்தார், பின் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடர் மூலம் மீண்டும் விஜய்யில் நடிக்க வந்தார்.
ஆனால் திடீரென அந்த சீரியலில் இருந்து வெளியேறினார், காரணத்தை அவர் சரியாகவே கூறவில்லை. இப்போது அவர் கன்னட சினிமாவில் சில படங்கள் நடிக்க தொடங்கியுள்ளாராம்.
இந்த நேரத்தில் நடிகை ரச்சிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படம் பதிவு செய்துள்ளார். அம்மன் வேடத்தில் போஸ் கொடுக்கும் புகைப்படம் அது, அதில் புதிய சீரியலில் சிறப்பு வேடத்தில் அம்மன் ரோலில் நடித்துள்ளேன்.
என்ன தொடர் என்று கெஸ் செய்யுங்கள் என பதிவு செய்துள்ளார்.