ராபர்ட் மாஸ்டர் ரொம்ப பெரியவர்..: ரச்சிதா காதல் கிசுகிசுவுக்கு ஓபன் பதிலடி
பிக் பாஸ்
பிக் பாஸ் ஷோ என்றாலே எப்போதும் ஒரு லவ் ஸ்டோரி நிச்சயம் இருக்கும். பிக் பாஸ் வீட்டில் காதலித்து நிஜத்தில் திருமணம் செய்த பிரபலங்களும் ஹிந்தி பிக் பாஸில் உண்டு. தமிழ் பிக் பாசிலும் லவ் ட்ராக் அதிகம் பாத்திருந்தாலும் எந்த ஜோடியும் திருமணம் செய்யும் அளவுக்கு செல்லவில்லை.
தற்போது ஒளிபரப்பாகி வரும் 6ம் சீசனில் ராபர்ட் மாஸ்டர் மற்றும் ரச்சிதா இருவரும் நெருக்கமாக பேசிக்கொள்வதை பார்த்து அதை ரொமான்ஸ் என நெட்டிசன்கள் குறிப்பிட்டனர்.

விளக்கம் சொன்ன ரச்சிதா
இந்நிலையில் கடந்த வாரம் எலிமினேஷன் ஆகி இருக்கும் ரச்சிதா தற்போது ஒரு பேட்டி அளித்து இருக்கிறார். அதில் ராபர்ட் மாஸ்டர் உடன் தான் ரொமான்ஸ் செய்ததாக பேசுபவர்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.
"ராபர்ட் மாஸ்டர் ரொம்ப பெரியவர், அவரே அழுகிறாரே என்று தான் அவரிடம் பேசினேன். எப்படி காட்டினார்கள் என்பது முக்கியம். நான் பார்ப்பதை ஸ்லோ மோஷனில் காட்டினால் அது ரொமான்டிக் ஆக பார்ப்பது போல தான் தெரியும். அதற்கெல்லாம் வாய்ப்பில்ல ராஜா” என கூறி இருக்கிறார்.

வாரிசு வசூல் முதல் நாளில் இத்தனை கோடி வருமா? பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு