புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ரச்சிதா மகாலட்சுமி- எந்த தொலைக்காட்சி தொடர் தெரியுமா?
ரச்சிதா
தமிழ் சின்னத்திரையில் சிறந்த நாயகிகளின் லிஸ்ட் எடுத்தால் அதில் முக்கிய பங்கு வகிப்பவர் நடிகை ரச்சிதா.
கன்னட சினிமாவில் இருந்து விஜய்யில் ஒளிபரப்பான தொடர் மூலம் தமிழுக்கு வந்தவர் முதல் தொடரிலேயே தனது நிறத்தை மாற்றி நடித்து அசத்தினார்.
அந்த தொடரின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடிக்க அப்படியே சரவணன்-மீனாட்சி என்ற தொடரின் 2ம் பாகத்தில் மீனாட்சியாக நடிக்க தொடங்கினார். இந்த தொடரும் கதாபாத்திரமும் ரச்சிதாவிற்கு நல்ல பிரபலத்தை கொடுத்தது.
அப்படியே சன், ஜீ, கலர்ஸ் தமிழ் என மாறி மாறி தொடர்கள் நடித்தவர் விஜய்யில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு விளையாடினார்.
புதிய தொடர்
அந்நிகழ்ச்சிக்கு பிறகு சொந்த வாழ்க்கை பிரச்சனை, அப்பா இறப்பு என நிறைய விஷயங்களை சந்தித்துள்ளார் ரச்சிதா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கன்னட படத்தில் நாயகியாக நடித்திருக்கும் விஷயத்தையும் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் அவரைப் பற்றி என்ன தகவல் என்றால் அவர் ஒரு புதிய தொடரில் நடிக்க கமிட்டாகி இருக்கிறாராம். ஜீ தமிழில் அவர் கமிட்டாகியுள்ள புதிய தொடரும் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.

ரஷ்யாவில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்கள் குடும்பங்களுக்கு... கிம் ஜோங் உன் அளித்த உறுதி News Lankasri

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri
