ஷூட்டிங்கில் வழுக்கி விழுந்த ரச்சிதா! அதிர்ச்சி வீடியோ
விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடர் மூலமாக சின்னத்திரை ரசிகர்களுக்கு அதிகம் பரிச்சயமானவர் ரச்சிதா. அந்த தொடர் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.
அதற்கு பிறகு விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ரச்சிதா நடித்தார். ஆனால் சில காரணங்களாக அதில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அவரது காட்சிகள் தொடரில் குறைக்கப்பட்டது தான் முக்கிய காரணம்.
அதனை தொடர்ந்து தற்போது கலர்ஸ் தமிழில் 'இது சொல்ல மறந்த கதை' என்ற சீரியலில் நடித்து வருகிறார். அதில் விதவையான, இரண்டு குழந்தைகளை வளர்க்க கஷ்டப்படும் ஒரு பெண் ரோலில் தான் அவர் நடித்து வருகிறார்.
மழையில் குழந்தைகள் உடன் அவர் கஷ்டப்படுவது போல காட்சிகள் சமீபத்தில் எடுத்திருக்கிறார்கள். அதில் ரச்சிதா நடித்து இருக்கிறார். அவர் குடையை எடுத்து நடக்கும்போது கீழே வழுக்கி விழுந்திருக்கிறார்.
அந்த வீடியோவை அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.