ரச்சிதாவின் அடுத்த சீரியல்: ஹீரோ விஷ்ணு இல்லை இவர்தான்? போட்டோ இணையத்தில் வைரல்
சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக சின்னத்திரையில் அதிகம் பிரபலம் ஆனவர் ரச்சிதா. அவரது பெயரே ரச்சிதா மஹாலக்ஷ்மி என்பதற்கு பதில் ரச்சிதா மீனாட்சி என ரசிகர்களால் மாற்றப்பட்டு விட்டது. அந்த அளவுக்கு அவர் புகழ் பெற்றார்.
அதற்கு பிறகு பல்வேறு சீரியல்களில் நடித்து வந்த அவர் விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் 2 என்ற தொடரில் தான் நடித்து வந்தார். ஆனால் அதில் இருந்து திடீரென வெளியேறி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.
இதனை தொடர்ந்து தற்போது கலர்ஸ் தமிழின் சொல்ல மறந்த கதை என்ற புது தொடரில் ரச்சிதா நடித்து வருகிறார். அதன் ஒளிபரப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. அதில் இரண்டு பெரிய குழந்தைகளுக்கு அம்மாவாக ரச்சிதா நடிக்கிறார். மேலும் ஹீரோவாக விஷ்ணு நடிக்கிறார்.
ஆனால் தற்போது ரச்சிதா இரண்டு குழந்தைகள் உடன் வேறு ஒருவர் உடன் இருக்கும் போட்டோ வைரல் ஆகி வருகிறது. அப்போ விஷ்ணு ஹீரோ இல்லையா என நெட்டிசன்கள் கேட்க, அந்த போட்டோ பிளாஷ்பேக் காட்சியில் வரும் ரச்சிதாவின் கணவர் தான்.
கணவர் இறந்தபிறகு தனது இரண்டு குழந்தைகளை எப்படி வளர்க்கிறார் என்பது தான் சீரியலின் கதையாக இருக்கும் என தெரிகிறது.