நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து நடிகை ரச்சிதா விலகுகிறாரா?- இதற்காக தானா?
விஜய் தொலைக்காட்சியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ஹிட்டாக ஓடுகிறது.
கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பின் உச்சத்தில் கதைக்களம் சென்றுகொண்டிருக்கிறது. முத்துராசை கொன்றது யார் என்ற ஒற்றை கேள்வியை வைத்து இயக்குனர் 2 வாரங்களாக கதையை நகர்த்திவிட்டார்.
இதற்கு மேலும் இழுக்காமல் கொலை விஷயத்தை முடிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. அது என்னவென்றால் இந்த சீரியலில் இருந்து முக்கிய நாயகியான ரச்சிதா விலகுவதாக கூறப்படுகிறது.
காரணம் அவருக்கு கன்னடத்தில் பெரிய நடிகரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.