பிக் பாஸ் தினேஷுக்கு எதிராக ரச்சிதா போட்ட பதிவு! இதோ பாருங்க
நடிகர் தினேஷ் மற்றும் ரச்சிதா இருவரும் காதல் திருமணம் செய்திருந்தாலும் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரித்து இருக்கின்றனர். அவர்கள் விவாகரத்து வழக்கும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
தற்போது தினேஷ் பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். அவர் ரச்சிதாவை பிரிந்து வாழ்ந்து வருவது பற்றி பல இடங்களில் பேசி வருகிறார்.
அவருக்கு எதிராக விசித்ரா மோசமாக பேசி வந்தார். 'இப்படி ஒருவருடன் குடித்தனம் நடந்த முடியாது. திரும்ப வந்துடாத' என ரச்சிதாவிடம் சொல்வது போல கேமரா முன்பு விசித்ரா பேசியது சர்ச்சை ஆனது. கமல் ஹாசனும் அவரை கண்டித்தார்.
விசித்ராவுக்கு ரச்சிதா ஆதரவு
இந்நிலையில் விசித்ரா பற்றி இன்ஸ்டாக்ராமில் ரச்சிதா பதிவிட்டு இருக்கிறார்.
'இதயங்களை வெல்வது தான் முக்கியம். நீங்கள் என் இதயத்தை மட்டுமின்றி என் ஆன்மாவையும் வென்றுவிட்டீர்கள் என ரச்சிதா பதிவிட்டு இருக்கிறார்.
மேலும் பைனலிஸ்ட் ஆக இருக்கும் தினேஷுக்கு எதிராகவும் அவர் பதிவிட்டு இருக்கிறார்.

ரீல்ஸ் எடுப்பதற்காக கொலை செய்த சிறுவர்கள் - திருமணத்திற்கு வந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம் IBC Tamilnadu
