மோசமான காட்சிகளில் நடிப்பதால் நடிகை ராதிகா ஆப்தேவுக்கு எதிராக கிளம்பிய ரசிகர்கள்!
நடிகை ராதிகா ஆப்தே பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்குபவர். இவர் தமிழில் கபாலி, ஆல் இன் ஆல் அழகு ராஜா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது ஆபாச பட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைதாகி உள்ள நிலையில் ஆபாசமாக நடிக்கும் ராதிகா ஆப்தே மீதும் நடவடிக்கை எடுக்கும்படி #BoycottRadhikaApte என்ற ஹேஷ்டேக்கில் பலரும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.
ராதிகா ஆப்தே பர்செத் என்ற படத்தில் ஆடை இல்லாமல் நடித்துள்ளதாகவும், விளம்பர படமொன்றிலும் ஆபாசமாக வந்ததாகவும்.
இந்திய கலாசாரத்துக்கு எதிராக செயல்படும் ராதிகா ஆப்தேவையும் ராஜ்குந்த்ராவை போல் கைது செய்ய வேண்டும் என வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.