மகள் திருமணத்திற்க்கு அழைக்காத குஷ்பு, நான் செஞ்சதெல்லாம் மறந்துட்டார்: ராதாரவி காட்டம்
நடிகை குஷ்புவின் மகள் அவந்திகாவின் திருமணம் சமீபத்தில் கோவாவில் நடைபெற்றது. அதற்கான அழைப்பிதழை பிரதமர் மோடி தொடங்கி முதலமைச்சர் விஜய் வரை பல முன்னணி பிரபலங்களுக்கு கொடுத்து இருந்தார் குஷ்பு.
திருமண நிகழ்ச்சியில் த்ரிஷா, தமன்னா, சிரஞ்சீவி உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

ராதாரவி காட்டம்
குஷ்பு வீட்டு திருமணத்திற்கு தன்னை அழைக்கவில்லை என நடிகர் ராதாரவி காட்டமாக பேசி இருக்கிறார். "நான் இதற்கு முன் செய்த உதவிகளை எல்லாம் மறந்துவிட்டார் போல, இப்போது அவர்கள் வேற லெவலுக்கு சென்றுவிட்டதாக நினைத்து எனக்கு அழைப்பிதழ் கொடுக்காமல் விட்டிருக்கலாம்."
"அரசியலில் தேர்தலில் போட்டியிட்டபோது மட்டும் என் ஆதரவு வேண்டும் என வந்தார்கள். சுந்தர்.சி போட்டியிட்டபோது கூட நான் வாழ்த்தி அனுப்பினேன். என்னை அழைத்து இருந்தால் நிச்சயம் கோவா போயிருப்பேன்."
"அங்கு சென்று வந்த பிறகு தான் பாக்யராஜ் மரணம் அடைந்துவிட்டார்" என ராதாரவி கூறி இருக்கிறார்.

ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri