ஓமைக்ரான் பரவல்: RRR தொடர்ந்து பொங்கல் ரேஸில் இருந்து விலகிய பிரம்மாண்ட படம்!
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதிலும் குறிப்பாக தியேட்டர்களில் 50 சதவீதம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் அறிவித்து இருக்கின்றன. மேலும் சில மாநிலங்களில் தியேட்டர்கள் முழுமையாக மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் பொங்கல் ரிலீசுக்கு தயாராக இருந்த பல படங்கள் தள்ளிப்போய் வருகிறது.3
ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படம், ஹிந்தியில் ஜெர்சி உள்ளிட்ட பல படங்கள் இதுவரை தள்ளிப்போய் இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடித்து இருக்கும் ராதே ஷியாம் படமும் பொங்கல் ரேஸில் இருந்து வெளியேறி இருக்கிறது.
படம் தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. "கடந்த சில தினங்களாக படத்தினை ரிலீஸ் செய்ய தீவிரமாக முயற்சி செய்தோம், ஆனால் அதிகரித்து வரும் ஓமைக்ரான் காரணமாக படத்தை பெரிய திரைக்கு கொண்டு வர இன்னும் காத்திருக்க வேண்டும் என நினைக்கிறோம்" என தெரிவித்து உள்ளனர்.
"We have to postpone the release of our film #RadheShyam due to the ongoing covid situation. Our sincere thanks to all the fans for your unconditional love and support. We will see you in cinemas soon..!" என அறிவித்து உள்ளனர்.