நடிகை ராதிகாவின் ட்விட்டர் கணக்கை முடக்கிய ஹேக்கர்கள் ! உஷாராக அவர் செய்த விஷயம்..
பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரில் சினிமாவை சேர்ந்த பல நட்சத்திரங்களும் தங்களின் கணக்கை தொடங்கி அதனை பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் தற்போதெல்லாம் சாமான்யர்களின் சமூக கணக்குகள் மட்டுமின்றி நட்சத்திரங்களின் கணக்குகளையும் ஹேக்கர்கள் ஹேக்கிங் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதனால் தற்போது நடிகை ராதிகாவும் பாதிக்கப்பட்டுள்ளார், அதன்படி தற்போது தனது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருப்பதாக நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.
அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ராதிகா, `ஹாய்.. என் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. எனவே அதில் பதிவிடப்படப்படுபவை, மெசேஜ்கள் முதலானவற்றில் இருந்து எச்சரிக்கையாக இருக்கவும். இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய முயற்சி செய்கிறோம்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Hi friends, my good friend and a huge powerhouse of talent @realradikaa account is hacked. A complaint has been raised and trying to solve the issue. She conveys her apologies for not being able to connect at the moment but promises to be back soon. Thanks for your support. ??
— KhushbuSundar (@khushsundar) December 6, 2021