கூட்டணி சேர்ந்த ராதிகா - பாக்யா.. இனி கோபியின் நிலைமை? பாக்கியலட்சுமியில் இன்று
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி மற்றும் ராதிகா இருவரும் பாக்யாவின் வீட்டில் தான் இருக்கின்றனர். பாக்யாயின் தொழிலில் தொடர்ந்து பல சிக்கல்கள் வந்துகொண்டிருப்பதால் கோபி அவரை மோசமாக தொடர்ந்து பேசி வருகிறார்.
ஆனால் அதை பார்த்து ராதிகா கோபத்துடன் கோபி மற்றும் அவரது அம்மா ஆகியோருக்கு பதிலடி கொடுத்து வருகிறார். 'முதல்ல உங்க பிஸ்னஸே மோசமான நிலைமைல தான இருக்கு' என கோபிக்கு அவர் நோஸ் கட் கொடுக்கிறார்.
கூட்டணி
பாக்யா வீட்டில் எல்லோருக்கும் காபி போடும்போது மாமியார் வந்து கோபிக்கும் போடும்படி கூறுகிறார். பாக்யா முதலில் முடியாது என கூறினாலும் அதன் பின் போட்டு கொண்டு போகிறார்.
கோபி அதை எடுத்து குடித்துக்கொண்டிருக்கும் போது ராதிகாவும் வெளியில் வாக்கிங் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வருகிறார். கோபி கையில் கப் இருப்பதை பார்த்து கேள்வி கேட்கிறார், அப்போது பாக்யா அவருக்கும் ஒரு கப் கொடுக்கிறார்.
ராதிகா வாங்க மாட்டார் என எல்லோரும் நினைக்க, அவர் அதை வாங்கி குடிக்கிறார். ராதிகா - பாக்யா மீண்டும் கூட்டணி சேர்ந்துவிட்டது கோபிக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. இனி அவர் நிலைமை என்ன ஆகுமோ.