பாக்யாவும் ராதிகாவும் செஞ்ச காரியத்தை பாருங்க! சண்டை போட சொன்னா இப்படி பண்றீங்களேமா..
பாக்கியலட்சுமி மஹாசங்கமம்
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ஒருவழியாக கோபியின் இரண்டாம் திருமணம் நடந்து முடிய இருக்கிறது. சமீபத்தில் வெளியான ப்ரோமோ ஒன்றில் திருமணம் முடிவது போலவும், அதன் பின் கோபியின் அம்மா அவரை திட்டி தலைமுழுகிவிட்டு வெளியே போவது போலவும் காட்டப்பட்டு இருக்கிறது.
அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் ஆகியவை இணைந்து மஹாசங்கமம் என்கிற பெயரில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன் ஷூட்டிங் கொடைக்கானலில் தற்போது நடந்து வருகிறது.
ஹனிமூன்
கோபி மற்றும் ராதிகா இருவரும் கொடைக்கானலுக்கு செல்வது போலவும், அதே போல பாக்யா குடும்பம் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் அங்கு வரும் என தெரிகிறது.
ஷூட்டிங்கில் பாக்யா மற்றும் ராதிகா இருவரும் சேர்ந்து இருக்கும் போட்டோவை தற்போது இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கின்றனர்.
சண்டை போட சொன்னா இப்படி பண்றீங்களே என சீரியல் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.