"உடலில் சர்ஜரி செய்துகொள்ள சொன்னார்கள்".. கபாலி பட நடிகையின் ஷாக்கிங் பேட்டி
பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடித்து வெளிவந்த திரைப்படம் கபாலி.
ராதிகா அப்டே
இப்படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்திருந்தவர் பாலிவுட் நடிகை ராதிகா அப்டே. இவர் ஹிந்தியில் வெளிவந்த பல படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை ராதிகா அப்டே அளித்துள்ள சமீபத்திய பேட்டி, பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஷாக்கிங் பேட்டி
இதில் " சினிமாவிற்கு நான் அறிமுகமான புதிதில், பலரும் என் உடலில் சர்ஜரி செய்யும்படி கூறினார்கள். அதாவது மூக்கு, மார்பகம், கன்னம், கால்கள், தொடை ஆகியவற்றை சர்ஜரி செய்து இன்னும் அழகாக மாற்றும்படி கூறினர்.
மேலும் சிலர் தலைமுடியில் வண்ணம் தீட்ட சொன்னார்கள். இவர்கள் கூறியதை கேட்டு எனக்கு கோபம் தான் வந்தது. ஆனாலும் அதன்பிறகு எனது உடலை இன்னும் அதிகமாக நேசிக்க தொடங்கினேன் " என்று கூறியுள்ளார்.

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri

கடலில் நீராடிய 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு - திருச்செந்தூரில் பரபரப்பு! IBC Tamilnadu
