"இந்த மாதிரி காட்சியில் நடிக்க மட்டும் நான் சினிமாவுக்கு வரவில்லை" - நடிகை ராதிகா ஆப்தே!

Radhika Apte
By Jeeva Nov 19, 2021 11:40 AM GMT
Report

ஹிந்தி தெலுங்கு தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே.

கதையில் தேவை இருந்தால் எவ்வளவு போல்டான கதாபாத்திரமாக இருந்தாலும் தயங்காமல் நடிக்கக்கூடியவர் என அனைவராலும் அறியப்படும் ராதிகா தமிழில் கபாலி படத்தில் ரஜினியுடன் நடித்தபோது தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சியமானவர்.

இவர் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு கவர்ச்சியாக நடிப்பதை குறித்து கேட்டபோது, "சமீபத்தில் ஒரு இயக்குனர் என்னை சந்தித்து அவரது படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னார். ஏன் இதே போன்ற கதைகளுடன் வருகிறீர்கள் என கேட்டேன்.

நீங்கள் பட்லாபூர், அகல்யா போன்ற படங்களில் தைரியமாக நடித்தது மட்டுமின்றி ஏற்கனவே ஆடை இல்லாமல் ஒரு படத்தில் நடித்து இருக்கிறீர்கள் அல்லவா என கேட்டார். எனவே இப்படத்தில் அதே போன்ற கதாபாத்திரம் செய்வீர்களோ என்ற எண்ணத்தில் உங்களை அணுகினேன் என தெரிவித்தார்.

"இந்திய சினிமாவில் மட்டுமல்ல வெளிநாட்டு படங்களிலும் ஆடை இல்லாமல் நடிப்பது ஒன்றும் தவறல்ல. கதைக்கு தேவை என்றால் அப்படி நடிக்கலாம்.

ஆடை இல்லாமல் நடிக்க வைப்பதற்காகவே கண்டபடி கதைகளை கொண்டு வந்தால் எப்படி?. அந்த மாதிரி நடிக்க நான் ஒன்றும் சினிமாவிற்கு வரவில்லை.

கதை பிடித்திருந்தால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்வேன். கதையே இல்லாமல் உடம்பை காட்டி நடிக்கவே மாட்டேன்'' என தெரிவித்திருக்கிறார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US