விஜய் சேதுபதியுடன் நடிக்கிறீர்களா.. நடிகை ராதிகா அப்தே கூறிய பதில்
ராதிகா அப்தே
பாலிவுட் நடிகையான ராதிகா அப்தே Vaah! Life Ho Toh Aisi! என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். ஹிந்தி மட்டுமின்றி பெங்காலி, மராத்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வந்தார்.
தமிழில் பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான தோனி திரைப்படம்தான் இவருடைய அறிமுக படமாகும். பின் ரஜினியுடன் கபாலி, கார்த்தியுடன் அழகுராஜா ஆகிய படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் சிஸ்டர் மிட்நைட்.
ராதிகா அப்தே கூறிய பதில்
இந்த நிலையில், நடிகை ராதிகா அப்தே விஜய் சேதுபதி - பூரி ஜெகன்நாத் படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளிவந்தது. இதற்கு சமீபத்திய பேட்டி ஒன்றில் ராதிகா பதிலளித்துள்ளார்.
"ஐயோ கடவுளே, இந்த செய்தி பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் இந்த படத்தில் நடிக்கவில்லை. இது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது" என கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி முதல் முறையாக இயக்குநர் பூரி ஜெகன்நாத் உடன் கூட்டணி அமைத்துள்ளார். பான் இந்தியா அளவில் உருவாகும் இப்படத்தை நடிகை சார்மி தயாரிக்கிறார். மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகை தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடலில் நீராடிய 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு - திருச்செந்தூரில் பரபரப்பு! IBC Tamilnadu

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
