கேன்டீனில் சபதம் போட்ட ராதிகா.. பாக்யாவுக்கு வந்த அடுத்த சிக்கல்! பாக்கியலட்சுமியில் இன்று
பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்யாவுக்கு வீட்டை எழுதி கொடுக்க ரேகிச்டேர் ஆபிஸ் வருகிறார் கோபி. அனைத்து வேலைகளும் முடிந்து கோபி பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுக்கிறார். அதன் பின் வெளியில் வரும் போது எழில் கோபியை எச்சரித்துவிட்டு வருகிறார். எந்த காரணத்திற்காகவும் அந்த வீட்டு பக்கம் வந்துடாதீங்க என எச்சரித்துவிட்டு வருகிறார்.
அதன் பின் வீட்டின் வெளியே 'பாக்கியலட்சுமி இல்லம்' என போர்டு வைக்கின்றனர். அதை பார்த்து கோபி மற்றும் ராதிகா இருவரும் மேலும் டென்சன் ஆகிறார்கள்.

சவால் விடும் ராதிகா
அதன் பின் கேன்டீனில் ராதிகா ஒரு புது சிக்கலை கிளப்புகிறார். தான் ஆர்டர் செய்த தோசையை தவறாக கொடுத்துவிட்டார்கள் என சண்டை போடுகிறார். பாக்யா வந்து மன்னிப்பு கேட்டும் ராதிகா விடாமல் சண்டை போடுகிறார்.
என்னை வீட்டை விட்டு அனுப்பியது போல இங்க கேன்டீனில் இருந்து உங்களை வெளியில் அனுப்புகிறேன், அது கூடிய சீக்கிரம் நடக்கும் என சவால் விட்டுவிட்டு போகிறார்.

பனிப்புயலில் சிக்கிய பல மாகாணங்கள்... போர்க்களமான சாலைகள்: 35 மில்லியன் மக்கள் பாதிப்பு News Lankasri
அதிரடி காட்டிய அர்ஜுன் டெண்டுல்கர்: 153 ரன் விளாசிய கேரள வீரரின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தல் News Lankasri