நடிகை ராதிகா முதல் படத்தில் நடித்தபோது எப்படி இருந்துள்ளார் தெரியுமா - 16 வயதில் எடுத்த போட்டோ
பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் எனும் படத்தின் மூலம் முதன் முதலில் தமிழ் திரையுலகில் தனது 16 வயதில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராதிகா.
இதன்பின் ரஜினி, கமல், பாக்கியராஜ், மோகன் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையானார்.
மேலும் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென்னிந்திய திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
வெள்ளித்திரையில் கலக்கி வந்த நடிகை ராதிகா, சின்னத்திரையில் சித்தி, செல்லமே, வாணி ராணி என பல வெற்றி சீரியல்கள் கொடுத்தார்.
இந்நிலையில் நடிகை ராதிகா தனது முதல் படத்தில் முதன் முதலில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஆம் இதோ அந்த புகைப்படம்..
My first day picture on the sets of “Kizhakey Pogum Rail”, the picture taken on the last day of shoot and the other picture is practising the art of smiling without disturbing the lipstick ❤️❤️❤️????lovely memories pic.twitter.com/0NSO2o7Gfd
— Radikaa Sarathkumar (@realradikaa) April 24, 2021