ராதிகாவின் கர்ப்பம் கலைந்தது.. அதிர்ச்சியில் கோபி! வீடியோ இதோ
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ராதிகாவின் வீட்டில் தான் கோபி தனது அம்மாவுடன் தங்கி வருகிறார். கர்ப்பமாக இருக்கும் ராதிகாவிடம் இந்த குழந்தை வேண்டாம் என ஏற்கனவே ஈஸ்வரி கூறியிருந்தார்.

சீரியலில் இருந்து வெளியேறிய பிரபலம் புதிய என்ட்ரி கொடுத்த நடிகர்... விஜய் டிவியின் எந்த தொடரில் பாருங்க
இந்த நிலையில், கர்ப்பமாக இருக்கும் ராதிகா திடீரென வழுக்கி கீழே விழுகிறார். உடனடியாக ராதிகாவை மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். அப்போது மருத்துவர், ராதிகாவின் கர்ப்பம் கலைந்துவிட்டது என அதிர்ச்சி தகவலை கூறுகிறார்.
ராதிகாவின் கர்ப்பம் கலைந்தது
இதனால் மனமுடைந்துபோகிறார் கோபி. என்னை தள்ளிவிட்டது உங்களுடைய அம்மா ஈஸ்வரி தான் என ராதிகா கூற கோபி ஆத்திரமடைகிறார். ஏற்கனவே இந்த குழந்தை வேண்டாம் என்று ஈஸ்வரி கூறி இருப்பதினால் இதை நம்பிவிடுகிறார் கோபி.
இதன்பின் பாக்கியவிடம் செல்லும் ஈஸ்வரி கரு கலைந்த விஷயத்தை அவரிடம் கூறுகிறார். வரும் வாரம் இதுதான் பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கவுள்ளது. அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இன்னும் என்னென்னவெல்லாம் நடக்கப்போகிறது என்று.
இதோ அந்த வீடியோ..

நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து? விரைவில் இந்தியா திரும்புவார் - உண்மை நிலவரம் இதுதான்! IBC Tamilnadu

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
