ராதிகா அம்மா மரணம்.. மகள் ரயாணே யாரை தாக்கி இப்படி பதிவிட்டுள்ளார்?
நடிகர் எம்ஆர் ராதாவின் மனைவியும், நடிகை ராதிகாவின் அம்மாவுமாகிய கீதா ராதா நேற்று முன்தினம் இரவு உடல்நலக்குறைவால் காலமானார்.
அவரது இறுதி சடங்குகள் நேற்று நடித்து முடிந்தது. நடிகை ராதிகா அம்மாவுக்காக கண்ணீர் சிந்தியது எல்லோரையும் உருக்கமடைய வைத்து இருக்கிறது.
ராதிகா மகள் பதிவு
இந்நிலையில் ராதிகாவின் மகள் ரயாணே இன்ஸ்டாவில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். "திருமணம், கொண்டாட்டம் போன்ற விஷயங்களில் கலந்துகொள்ளவில்லை என்றாலும், நிச்சயம் இறுதி அஞ்சலியில் கலந்துகொள்ள வேண்டும் என எனது அப்பா சொல்வார்."
"பழைய பகை எதுவாக இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு போய் மரியாதை செலுத்து என அவர் சொல்வார்" என கூறி இருக்கிறார்.
ரயாணே திடீரென யாருக்காக இப்படி பதிவிட்டு இருக்கிறார் என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.