புதிய சீரியலில் நடிக்கும் ராதிகா சரத்குமார், ராடான் தயாரிக்கும் தொடர்... எந்த தொலைக்காட்சி தெரியுமா?
ராதிகா
தமிழ் சினிமாவை தாண்டி சின்னத்திரையிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ராதிகா.
வெள்ளித்திரையில் செம பிஸியான நாயகியாக வலம் வந்தவர் இப்போது தரமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார்.
சின்னத்திரை பக்கம் சித்தி சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்தவர் தொடர்ந்து அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி, சந்திரகுமாரி உள்ளிட்ட தொடர்களில் நடித்தார்.
ஆனால் இடையில் இனி சீரியல்களில் நடிக்கப்போவதில்லை என்றவர் அரசியலில் ஈடுபாடு காட்டி வந்தார்.
புதிய தொடர்
தனது சொந்த நிறுவனமான ரேடான் மீடியா தயாரிப்பில் தற்போது ராதிகா புதிய சீரியல் தயாரிக்கிறார்.
தாயம்மா குடும்பத்தார் என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய தொடர் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாம். மற்றபடி இந்த புதிய சீரியல் குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை.