ராதிகா இவ்ளோ நல்லவரா நீங்க.. நம்பவே முடியல! பாக்கியலட்சுமி ரசிகர்களே ஷாக்
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி மகள் இனியாவை அவரது வீட்டுக்கு கூட்டிசென்றுவிட்டார். அதனால் தாத்தாவும் அவருடன் வந்து இருக்கிறார். இதனால் வரும் பிரச்சனைகள் ஒருபக்கம் சென்று கொண்டிருக்கிறது.
பாக்யாவுக்கு காண்ட்ராக்ட்
மறுபுறம் பாக்யா மருமகள் ஜெனி உடன் சேர்ந்து ஒரு டெக் பார்க் கேன்டீன் காண்ட்ராக்ட் எடுக்க போகிறார். அவர் அதற்காக பேசிவிட்டு வெளியில் வந்து நிற்கும்போது தான் ராதிகா அவரை தூரத்தில் இருந்து பார்த்துவிடுகிறார்.
ராதிகா பணியாற்றும் அலுவலகம் தான் அது. பாக்யா எதற்காக வந்து சென்றார் என்கிற விஷயத்தை கேட்டு தெரிந்துகொண்டு அதன் பின் கோபியிடம் சொல்கிறார் அவர். அந்த காண்ட்ராக்ட் பாக்யாவுக்கு கிடைக்கக்கூடாது என கோபி கோபமாக கூறுகிறார்.
அதற்கு அவர் 'நான் சொன்னால் காண்ட்ராக்ட் கொடுக்கமாட்டார்கள். ஆனால் அப்படி செய்ய மாட்டேன். அவருக்கு திறமை இருந்தால் வளரட்டும், நான் அதில் தடையாக நிற்க மாட்டேன்' என கூறுகிறார்.
இனியாவுக்கு விபத்து
அதன் பின் பள்ளியில் இருந்து கோபிக்கு போன் வருகிறது. பள்ளியில் இனியா மற்றும் மற்ற மாணவர்கள் பிக்னிக் சென்ற வண்டி விபத்தில் சிக்கியது என சொல்கிறார்கள். அதை கேட்டு கோபி வேகமாக பள்ளிக்கு கிளம்புகிறார்.
அதே நேரத்தில் பாக்யாவுக்கு இனியா தோழியின் அம்மா கால் செய்து விஷயத்தை சொல்ல அவர் கடும் அதிர்ச்சி ஆகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெறுகிறது.
பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ரித்திகா திருமண வரவேற்பு நிகழ்ச்சி- யாரெல்லாம் வந்தார்கள் பாருங்க