திரையரங்குகளில் அலப்பறை செய்த ராதிகாவின் தாய்கிழவி ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?
தாய்கிழவி
தமிழ் சினிமாவில் இந்த வருடம் வந்த படங்களில் திரையரங்குகளில் மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து பார்த்த திரைப்படம் தாய் கிழவி.
அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வெளியான இப்படத்திற்கு மக்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர்.

சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் தயாரான இப்படம் கடந்த பிப்ரவரி 27ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
வயதான தோற்றத்தில் ராதிகா அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார், அவரின் நடிப்பிற்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவருமே பாராட்டு தெரிவித்தார்கள். ராதிகா நடிப்பு தாண்டி கதை ரீதியாகவும் பாராட்டுக்களை பெற்றது.
ராதிகாவை தாண்டி இப்படத்தில் சிங்கம்புலி, அருள்தாஸ், முனிஷ்காந்த், பால சரவணன், இளவரசு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

ஓடிடி ரிலீஸ்
தாய்கிழவி என்றாலே அலப்பறை தான் என ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடிய இப்படம் ரூ. 85 கோடி வரை வசூலித்தள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தாய்கிழவி திரைப்படம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri
இஸ்ரேலிய சுதந்திர தினத்தில் தீப்பந்தம் ஏற்றும் முதல் இந்தியர்: கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு News Lankasri