அரசியலுக்கு எதற்கு வரனும், அவர்களின் பணத்தையே வாங்கி செலவு செய்யவா?- ராகவா லாரன்ஸ் ஓபன் டாக்
ராகவா லாரன்ஸ்
தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக, நடன இயக்குனராக கலக்கி வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்குனராக களமிறங்கி இயக்கிய அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட் தான்.
கடைசியாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியாகியுள்ளது, அடுத்தடுத்து அதிகாரம், பென்ஸ், கால பைரவா, புல்லட், காஞ்சனா 4 என தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.
அரசியல்
அண்மையில் நடிகர் ராகவா லாரன்ஸ் அரசியல் வருவது குறித்து பேசியுள்ளார். அதில் அவர், என்னை பார்த்து நீங்கள் எப்போது அரசியலுக்கு வரப்போகிறீங்கள் என கேட்கிறார்கள்.
நான் ஏன் அரசியலுக்கு வரனும், இப்போதே நல்லது செய்துகொண்டு தானே இருக்கிறேன்.
அரசியலுக்கு வந்து மக்கள் பணத்தை வாங்கி மக்களுக்கு நல்லது செய்து அதை போஸ்டர் அடித்து ஒட்டுவதை விட உழைத்த பணத்தில் மனதார மக்களுக்கு செய்யும் நல்லதே பெரியது என நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

திருமணம் செய்து 4 வருடத்தில் மனைவியை விவாகரத்து செய்த சாஹல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்! IBC Tamilnadu
