அஜித் அதை செய்யவில்லை என்றால் எனக்கு இந்த வாழ்க்கை இல்லை.. ஓபனாக பேசிய ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ்
தமிழ் சினிமாவில் நடிப்பதை தாண்டி பல பிரபலங்களும் நிறைய சிறப்பான விஷயங்கள் செய்து வருகின்றனர்.
அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலமான நடிகர் தான் ராகவா லாரன்ஸ். நடிகர், நடன கலைஞர் என பன்முகம் கொண்டவர் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.
சமீபத்தில் கூட கரையானால் ரூ. 1 லட்சத்தை இழந்த கூலித் தொழிலாளியின் குடும்பத்தினருக்கு சென்னை வரவைத்து அந்த பணத்தை அவர்களுக்கு கொடுத்துள்ளார். ராகவா லாரன்ஸ் செய்யும் இந்த உதவியை பலரும் பாராட் வந்தனர்.
நடிகர் பேட்டி
சமீபத்தில் ஒரு பேட்டியில் ராகவா லாரன்ஸ், நடிகர் அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது, சரண் சாருடன் சென்று ஒரு கதையும் கூறினேன்.
அதைக் கேட்டுவிட்டு அஜித் சூப்பர் கதை, உங்களது கேரக்டரை என்னுடைய கதாபாத்திரத்தை விட இன்னும் அதிக எழுதுங்கள் என்று கூறினார்.
பின் நான் புதிய காரை வாங்கியுள்ளேன் என்பதை தெரிந்து கொண்டு காரில் உட்கார்ந்து ஸ்டார்ட் செய்து கொடுத்தார்.
அமர்க்களம் படத்தில் லாரன்ஸ் வேண்டாம் நானே நடனம் ஆடிவிடுகிறேன் என்று கூறியிருந்தால் எனக்கு இந்த வாழ்க்கை இல்லை என்ற கூறியுள்ளார்.