எனக்கு விஜய் மட்டும் தான் நண்பன்.. இப்படி சொன்ன முக்கிய தமிழ் ஹீரோ யார் தெரியுமா?
நடிகர் விஜய் தற்போது கோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். அவருக்கு மற்ற நடிகர்களே கூட பலரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.
தற்போது பிரபல நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனக்கு தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரே நெருங்கிய நண்பன் விஜய் மட்டும் தான் என கூறி இருக்கிறார்.
லாரன்ஸ் - விஜய்
பின்னணியில் நடனமாடும் டான்சராக இருந்து தற்போது முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கும் லாரன்ஸ் சமீபத்தில் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறி இருக்கிறார்.
எனக்கு பெரிதாக நண்பர்கள் கிடையாது, நண்பன் என சொன்னால் எனக்கு விஜய் மட்டும் தான் என குறிப்பிட்டுள்ளார் அவர். லாரன்ஸ் மற்றும் விஜய் இருவரும் ஆரம்பகாலத்தில் இருந்தே நண்பர்களாக இருக்கின்றனர்.
இருப்பினும் விஜய் படங்களில் பணியாற்றவேண்டும் என நானும் கேட்டது கிடையாது, என் இயக்கத்தில் நடிக்கவேண்டும் என அவரும் கேட்டதில்லை என அவர் கூறி இருக்கிறார்.

Post Office Special திட்டத்தில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால்.., 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே லட்சக்கணக்கில் News Lankasri
