காஞ்சனா 4 குறித்து பேசிய ராகவா லாரன்ஸ்.. மாஸ் அப்டேட்

Kathick
in திரைப்படம்Report this article
காஞ்சனா 4
ராகவா லாரன்ஸ் என்றால் நம் அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வரும் படம் காஞ்சனா தான். முனி படத்தில் துவங்கி காஞ்சனா 3 வரை அனைத்து திரைப்படங்களும் சூப்பர்ஹிட்டாகியுள்ளது.
காஞ்சனா 4 வரும் என காஞ்சனா 3 படத்தின் இறுதியிலேயே ராகவா லாரன்ஸ் கூறியிருந்தார். அதே போல் பல பேட்டிகளிலும் அதற்கான வேலைகள் நடந்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் காஞ்சனா 4 திரைப்படம் குறித்து பல சில தகவல்கள் இணையத்தில் வைரலானது. இதில் இப்படத்தில் கதாநாயகியாக சென்சேஷனல் நடிகை மிருணால் தாகூர் நடிக்கிறார் என பேசப்பட்டது.
ராகவா லாரன்ஸ் கொடுத்த அப்டேட்
ஆனால், அதன்பின் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் தளத்தில் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். காஞ்சனா 4 குறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வெளிவரும் என கூறியிருந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் பத்திரிகையாளர்கள் ராகவா லாரன்ஸ் இடம் அடுத்தடுத்த படங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த ராகவா லாரன்ஸ் "தற்போது பென்ஸ் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறேன். காஞ்சனா 4 கதையை எழுதி முடித்திருக்கிறேன். படப்பிடிப்பு விரைவில் துவங்கும்" என கூறியுள்ளார்.