பாலாவை ஹீரோ ஆக்குவதாக சொன்ன லாரன்ஸ், ஆனால் இப்போது..
விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக பிரபலம் ஆனவர் பாலா. அவரது காமெடிக்கு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. விஜய் டிவியின் CWC, மற்ற நிகழ்ச்சிகள் பலவற்றிலும் அவர் கலந்துகொண்டு ரசிகர்களை சிரிக்கவைத்து இருக்கிறார்.
பாலா சமீப காலமாக நடிப்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு பலருக்கும் உதவிகள் செய்து வருகிறார். ஆம்புலன்ஸ் இல்லாத மலை கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, மாற்று திறனாளிகளுக்கு வாகனம் வாங்கி கொடுப்பது, ஏழை மாணவிகளுக்கு கல்வி கட்டணம் என பல உதவிகள் செய்து வருகிறார்.
இப்படி சேவையில் ஈடுபட்டு வரும் பாலாவை தான் ஹீரோவாக படத்தில் அறிமுகப்படுத்தபோவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் முன்பே அறிவித்து இருந்தார்.
அந்த அறிவிப்பு வந்த நீண்ட காலம் ஆகியும் அந்த படம் பற்றி எந்த தகவலும் வரவில்லை.
ஹீரோவாகும் பாலா
இந்நிலையில் லாரன்ஸ் தற்போது வேறொரு தயாரிப்பாளர் பாலாவின் படத்தை தயாரிப்பதாக அறிவித்து இருக்கிறார்.
"பாலாவை நான் ராகவேந்திரா ப்ரொடக்ஷன்ஸ் மூலமாக அறிமுகப்படுத்துவதாக அறிவித்தேன். ஆனால் அதன் பின் ஒரே வாரத்தில் ஒரு நல்ல தயாரிப்பாளர் நல்ல கதையுடன் அணுகினார்."
"ஆம், பாலாவின் அறிமுக படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது" என லாரன்ஸ் பதிவிட்டு இருக்கிறார்.
Vanakkam makkale! I'm glad to announce that my thambi @bjbala_kpy is set to achieve his lifetime dream! I had announced that I will introduce him under ragavendra production but within one week itself, A good producer approached with a good script. Yes, his debut film is set to… pic.twitter.com/wRQsvmUhdN
— Raghava Lawrence (@offl_Lawrence) April 18, 2025