கரையானால் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த சோகம், ராகவா லாரன்ஸ் செய்த நெகிழ்ச்சி செயல்... பாராட்டும் மக்கள்

By Yathrika May 09, 2025 06:30 AM GMT
Report

வைரல் வீடியோ

சமூக வலைதளங்கள் மூலம் நல்லது, கெட்டது என எல்லா விஷயங்களும் உள்ளது.

அப்படி நல்லதில் ஒரு விஷயம், யாராவது எங்கேயாவது கஷ்டப்பட்டால் அந்த விவரம் சமூக வலைதளங்களில் வெளியாகி உலகம் உள்ள யாராவது உதவி செய்துவிடுகிறார்கள். அப்படி தான் இப்போது ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் ரீமேக் சீரியல்.. எந்த மொழி தொடர்?

விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் ரீமேக் சீரியல்.. எந்த மொழி தொடர்?

சிவகங்கை மாவட்டம் சுக்கனாம்பட்டியை சேர்ந்த முத்துக்கருப்பி என்ற பெண் தனது கணவருடன் கூலி தொழில் செய்துவருகிறார். அந்த தொழிலில் வரும் சம்பளத்தை ஒரு தகர டப்பாவில் போட்டு சிறுக சிறுக சேமித்துள்ளார்.

இவருக்கு 2 மகள்கள் ஒரு மகன் இருக்கிறார்கள், அவர்களின் காது குத்துக்காக பணத்தை சேமித்து வைத்துள்ளார். ஒரு லட்சம் வரை சேமித்த அந்த பணத்தை மழை காரணமாக கரையான் அந்த உண்டியலுக்குள் சென்று பணத்தை அரித்துவிட்டன.

தனது பணம் அரிக்கப்பட்டிருப்பதை கண்டு முத்துக்கருப்பி கதறிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் கலங்க செய்தது.

கரையானால் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த சோகம், ராகவா லாரன்ஸ் செய்த நெகிழ்ச்சி செயல்... பாராட்டும் மக்கள் | Raghava Lawrence Help To A Poor Women

வீடியோ

அந்த பெண் கதறிய வீடியோ ராகவா லாரன்ஸ் கண்ணில் பட முத்துக்கருப்பியை சென்னை வரவழைத்து ஒரு லட்சம் ரூபாயை தந்திருக்கிறார்.

கரையானால் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த சோகம், ராகவா லாரன்ஸ் செய்த நெகிழ்ச்சி செயல்... பாராட்டும் மக்கள் | Raghava Lawrence Help To A Poor Women

இந்த விஷயத்தை வீடியோவுடன் பகிர்ந்துள்ளார் ராகவா லாரன்ஸ், அவரை ரசிகர்கள் பாராட்டியும் வருகிறார்கள்.   

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US