விபத்தில் சிக்கி உயிருக்காக போராடிய கல்லூரி மாணவன்.. ஓடி வந்து காப்பற்றிய பிரபல நடிகர்
ராகவா லாரன்ஸ்
தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் ராகவா லாரன்ஸ். இவர் நடிப்பில் உருவாகியுள்ள ருத்ரன் திரைப்படம் அடுத்ததாக வெளியாகவுள்ளது.
மேலும் இன்னும் சில திரைப்படங்களையும் கைவசம் வைத்துள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸ் எளிய மக்களுக்கும் மாற்று திறனாளிக்கும் பல உதவிகளை தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறார்.
அதை நாம் தொடர்ந்து வரும் செய்திகள் மூலம் கவனித்துக்கொண்டே இருக்கிறோம். அந்த வகையில் கல்லூரி மாணவன் ஒருவர் விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் உயிருக்காக போராடியிருக்கிறார்.
காப்பற்றிய லாரன்ஸ்
மருத்துவத்திற்கு பணம் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்த அந்த தாயின் நிலைமையை பிரபல பத்திரிகையாளர் மூலம் அறிந்துகொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் உடனடியாக அவருக்கு உதவி செய்து மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார்.
அதன்பின், விபத்தில் சிக்கிய மாணவனின் மருத்துவ செலவை அனைத்தையும் தானே ஏற்றுக்கொண்டு, அந்த மாணவனின் உயிரையும் காப்பற்றியுள்ளார்.
எல்லைமீறும் ஷாருக்கான் மகள்.. பொது இடத்துக்கு எப்படி ஒரு சேலையில் வந்திருக்கிறார் பாருங்க

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
